சாராயம் விற்ற பெண் உள்பட 3 பேர் கைது


சாராயம் விற்ற பெண் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 10 July 2023 12:15 AM IST (Updated: 10 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம் பகுதியில் சாராயம் விற்ற பெண் உள்பட 3 பேர் கைது

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்

சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் குளத்தூர், புதுப்பாலப்பட்டு பகுதிகளில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வீட்டின் அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த குளத்தூர் கிராமத்தை சேர்ந்த சி.ஏழுமலை(வயது 41), ஆர்.ஏழுமலை (42), பூதுப்பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65) ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார் இவர்களிடம் இருந்து 31 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

1 More update

Next Story