3 பேர் ஆற்காடு கோர்ட்டில் சரண்


3 பேர் ஆற்காடு கோர்ட்டில் சரண்
x

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் 3 பேர் ஆற்காடு கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

ராணிப்பேட்டை

சென்னை செங்குன்றம் அருகே பாடியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பொன்னியம்மன் நகரை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 53), அ.தி.மு.க.வைச் சேர்ந்த இவர் பாடியநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவர் திருவள்ளுர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளராகவும் இருந்தார்.

இந்த நிலையில் பார்த்திபன் நேற்று முன்தினம் காலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது அங்கு 3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் பார்த்திபனை சரமாரியாக வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் கொலை சம்பவத்தில் தேடப்பட்ட சென்னை மணலி பகுதியை சேர்ந்த கவுரிசங்கர் (24), ராமாபுரம் பகுதியை சேர்ந்த சக்திவேல் (27), காசிமேடு ராமாபுரம் பகுதியை சேர்ந்த மோகன் (27) ஆகிய 3 பேரும் ராணிப்பேட்டை ஆற்காடு மத்திய குற்றவியல் கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு தீபிகா ஹேமகுமார் முன்பு சரணடைந்தனர்.

அவர்களை வேலூர் மத்திய சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story