கத்தியை காட்டி மிரட்டி பணம்-செல்போன் பறித்த 3 பேர் கைது
கத்தியை காட்டி மிரட்டி பணம்-செல்போன் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் செங்கலக்குடி பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 27). இவர் திருச்சி ஆர்.எம்.எஸ். காலனி பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திருச்சி கூனி பஜார் பீமநகர் பகுதியை சேர்ந்த கிஷோர் கண்ணன் (23) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1250 பறித்து சென்றார். இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிஷோர் கண்ணனை கைது செய்தனர்.
இதேபோல் திருச்சி வரகனேரி சந்தனபுரம் பகுதியைச் சேர்ந்தவர் இப்ராகிம்சா ராஜா (42). இவர் திருச்சி ரெயில்வே ஜங்ஷன் பகுதியில் நின்று கொண்டிருந்தார், அப்போது அங்கு வந்த கருமண்டபம் பகுதியை சேர்ந்த பாபு என்பவர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1500 பறித்து சென்றார். இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபுவை கைது செய்தனர்.
இதேபோல் திருச்சி மணிகண்டம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் குணா. இவர் திருச்சியில் மத்திய பஸ் நிலையம் அருகே நடந்து வந்தபோது அங்கு வந்த புதுக்கோட்டை ஆவுடையார் கோவில் முத்துவேல் நகர் பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் (31) என்பவர் குணாவிடம் இருந்த செல்போனை பறித்து சென்றார். இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிதாசை கைது செய்தனர். அவரிடம் இருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.