மறைமலைநகரில் ஆட்டோவில் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 3 பேர் கைது


மறைமலைநகரில் ஆட்டோவில் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 3 பேர் கைது
x

மறைமலைநகரில் ஆட்டோவில் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே ஆட்டோவில் பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் சுற்றி கொண்டிருப்பதாக மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பொத்தேரி பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபடும்போது அந்த வழியாக ஆட்டோவில் வந்த ஒரு கும்பல் தப்பி ஓட முயன்றது‌.

உடனே போலீசார் ஆட்டோவை மடக்கி பிடித்து அதில் இருந்த 3 பேரை விசாரித்த போது ஆட்டோவில் இருந்த அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்தனர்‌.

இதையடுத்து 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜராக வரும் 2 பேரை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டியது தெரிய வந்தது.

இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்லாவரம் காமாட்சி நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 20), மடிப்பாக்கம் சத்தியமூர்த்தி (23), மூவரசம்பட்டு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (30) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து ஆயுதங்களை கைப்பற்றினர். பின்னர் 3 பேரையும் செங்கல்பட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிபதி 3 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.


Next Story