மது விற்ற 3 பேர் கைது
மது விற்ற 3 பேர் கைது
ஆனைமலை
ஆனைமலையை அடுத்த சேத்துமடை பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆனைமலை போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு மதுரை வீரன் கோவில் வீதியை சேர்ந்த செல்வம்(வயது 43), விற்பனை செய்வதற்காக 8 மதுபாட்டில்களை வைத்திருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர். மேலும் அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயன்(30) என்பவர், விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 12 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரும் கைது செய்யப்பட்டார்.
இதேபோன்று கிணத்துக்கடவு அருகே தாமரைக்குளம் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ரோந்து சென்றபோது, அந்த பகுதியில் புதரில் பதுக்கி வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்த செட்டியக்காபாளையத்தை சேர்ந்த தங்கராஜ்(வயது 60) என்பவரை கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்து 10 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.