குட்கா விற்ற 3 பேர் கைது


குட்கா விற்ற 3 பேர் கைது
x

குட்கா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

திருவள்ளூர்

திருவள்ளூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் நேற்று திருவள்ளூர் பஜார் பகுதியில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது போலீசார் அங்குள்ள பெட்டி கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் 1,100 பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்ததை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த பெட்டிக்கடைக்காரரான திருவள்ளூர் பகுதியை சேர்ந்த கவுதம் (வயது 25) என்பவரை திருவள்ளூர் டவுன் போலீசார் கைது செய்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

அதே போல மணவாளநகர் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மணவாளநகர் பகுதியில் உள்ள பள்ளி அருகில் ரோந்துப்பணியில் ஈடுபட்ட போது அங்கு இருந்த ஒரு நபர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தார். இதனால் சந்தேகம் இருந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்த போது அவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கூலி தொழிலாளிகள் மற்றும் வட மாநில தொழிலாளிகளுக்கும் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் அவர்களிடம் இருந்த 150 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் போலீஸ் விசாரணையில் பிடிபட்ட நபர் திருவள்ளுவர் அடுத்த கீழ்நல்லாத்தூர் பகுதியை சேர்ந்த பாலகுமரன் (45) என்பது தெரியவந்தது அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

அதேபோல் புல்லரம்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ஈக்காடு பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு பெட்டிக்கடையை போலீசார் சோதனை செய்த போது அந்த கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கட்டுகள் 52 இருந்ததை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் குட்கா பொருட்களை விற்பனை செய்ததாக ஈக்காட்டை சேர்ந்த பார்த்திபன் (30) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story