மதுவிற்ற 3 பேர் கைது
கூத்தாநல்லூர் அருகே மதுவிற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர்
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் போலீசார், கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, மரக்கடை, கோரையாறு, மேல்கொண்டாழி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, லெட்சுமாங்குடி பாலம் அருகில் மது விற்பனை செய்து கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மரக்கடை, தேர்வடக்கு தெருவைச் சேர்ந்த முகமது ஹாஜா (42, மரக்கடை, அவ்வை காலனியைச் சேர்ந்த பக்கிரிசாமி (58), அகரபொதக்குடி, காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜலிங்கம் (55) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து கூத்தாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story