சாராயம் விற்ற 3 பேர் கைது
சாராயம் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்ட தனிப்படை போலீசார் ரெகுநாதபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா நரங்கியப்பட்டு பகுதியை சேர்ந்த பாரிவள்ளல் (வயது 41), வெட்டிக்காடு தெற்கு தெருவை சேர்ந்த பாஸ்கர் (39), இலுப்பவிடுதி கோவில் தெருவை சேர்ந்த ஞானம் (41) ஆகிய 3 பேர் எரிசாராயத்தை பாட்டிலில் அடைத்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர்.
இதையடுத்து 3 பேரையும் கைது செய்து, 13½ லிட்டர் எரிசாராயம், 5 செல்போன்கள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றினர். பின்னர் 3 பேரையும் ஆலங்குடி மதுவிலக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story