மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 3 பேர் கைது
மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் தா.பழூர்- சுத்தமல்லி சாலை பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சதீஷ் (வயது 29), மணிவேல் மனைவி செல்வி (46) ஆகியோர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல கோடங்குடி கிராமத்தில் சப்- இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோடங்குடி தெற்கு தெருவை சேர்ந்த ஜெயராமன் மனைவி சாவித்திரி (65) என்பவர் வீட்டில் வைத்திருந்த 13 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சாவித்திரியையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story