புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது


புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது
x

புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரணிநாதன் தலைமையிலான போலீசார், வழுதரெட்டி, தென்னமாதேவி, முத்தாம்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள பெட்டிக்கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக வழுதரெட்டியை சேர்ந்த சத்யா (வயது 35), தென்னமாதேவி மாலதி (38), நடுமுத்தாம்பாளையத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் (52) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைதான இவர்களிடமிருந்து மொத்தம் 250 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


Next Story