பொதுமக்களிடம் செல்போன் பறித்த 3 பேர் கைது


பொதுமக்களிடம் செல்போன் பறித்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 1 Aug 2023 1:30 AM IST (Updated: 1 Aug 2023 1:31 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில், போலீஸ் எனக்கூறி பொதுமக்களிடம் செல்போன் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில், போலீஸ் எனக்கூறி பொதுமக்களிடம் செல்போன் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தீவிர கண்காணிப்பு

பொள்ளாச்சி, கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் எனக்கூறி சிலர் பொதுமக்களிடம் செல்போன் பறிப்பதாக நகர மேற்கு போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து கோைவ மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா மேற்பார்வையில் நகர மேற்கு போலீ்ஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் பொள்ளாச்சி மாட்டுச்சந்தை அருகே தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் போலீஸ் நிலையத்து அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

செல்போன்கள் மீட்பு

அப்போது அவர்கள் பொள்ளாச்சியை சேர்ந்த பிரபு, சிவகுமார் என்பதும், பல்வேறு இடங்களில் போலீஸ் எனக்கூறி பொதுமக்களிடம் செல்போன் பறித்து உள்ளதும் ெதரியவந்தது. மேலும் பறித்த செல்போன்களை நா.மு.சுங்கத்தில் செல்போன் கடை நடத்தி வரும் அருண் பிரசாத் என்பவரிடம் கொடுத்து வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அருண் பிரசாத்தையும் போலீசார் பிடித்தனர். தொடர்ந்து 3 பேரும் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 22 செல்போன்கள் மீட்கப்பட்டது.


Related Tags :
Next Story