நகை பறித்த 3 பேர் கைது
நகை பறித்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
காரைக்குடி
செட்டிநாடு போலீஸ் சரகம் கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் அழகம்மாள் (வயது 58).இவர் கானாடுகாத்தானில் உள்ள அம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு பெட்ரோல் பங்க் அருகில் உள்ள பஸ் ஸ்டாப்பில் பஸ் ஏற முயன்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் அழகம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 15 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிவிட்டனர், இது குறித்த புகாரின் பேரில் செட்டிநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சங்கிலியை பறித்து சென்றவர்கள் வேலங்குடியை சேர்ந்த பாண்டி (32) விழுப்புரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (24) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் காரைக்குடி வடக்கு காவல் நிலையம் காளையப்பா நகரில் 1 பவுன் சங்கிலி திருட்டில் ஈடுபட்ட வேலங்குடியை சேர்ந்த செல்லத்துரை (35) என்பவரையும் வடக்கு போலீசார் கைது செய்தனர்.