ஆட்டோ மோதியதில் 3 பேர் சாக்கடையில் விழுந்து படுகாயம்


ஆட்டோ மோதியதில் 3 பேர் சாக்கடையில் விழுந்து படுகாயம்
x

கோவை அருகே ஆட்டோ மோதியதில்3 பேர் சாக்கடையில் விழுந்து படுகாயம் அடைந்தனர்.

கோயம்புத்தூர்


துடியலூர்

கோவை அருகே ஆட்டோ மோதியதில்3 பேர் சாக்கடையில் விழுந்து படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவ தாவது:-

3 பேர் படுகாயம்

கோவையை அடுத்த துடியலூர் போலீஸ் நிலையம் அருகே ஆட்டோ ஒன்று வேகமாக வந்தது. அந்த ஆட்டோ திடீரென்று அந்த வழியாக சென்ற பள்ளி மாணவி உட்பட 3 பேர் மீது மோதியது.

இதில் அவர்கள் 3 பேரும் அருகில் இருந்த சாக்கடை கால்வாய்க்குள் தூக்கி வீசப்பட்டனர். இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர். அந்த ஆட்டோவுடன் டிரைவரும் சாக்கடைக்குள் விழுந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் விரைந்து சென்று சாக்கடைக்குள் இறங்கி 4 பேரையும் மீட்டனர். இதை அறிந்த போலீசாரும் விரைந்து வந்து, படுகாயமடைந்த 3 பேரை யும் மீட்டு 108 ஆம்புலன்சில் ஏற்றி கோவை அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர்.

வாக்குவாதம்

ஆட்டோ டிரைவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். இதில், ஆட்டோவை ஓட்டி வந்தவர் தொப்பம் பட்டியை சேர்ந்த மோகன்ராஜ் என்பதும், இவர் பழைய ஆட்டோவை விலைக்கு வாங்கியதும், மது குடித்து விட்டு போதையில் அவர் ஆட்டோ ஓட்டி வந்ததால் விபத்தில் சிக்கியதும் தெரிய வந்தது.

எனவே அவர் மது போதையில் இருப்பதை உறுதி செய்ய போலீ சார் கருவி மூலம் சோதனை நடத்த முயன்றனர்.

அதற்கு அவர் ஒத்துழைக்க மறுத்து வாக்குவாதம் செய்தார். ஆனாலும் ஒரு வழியாக மோகன்ராஜிடம் போலீசார் மது போதை சோதனை நடத்தினர்.

விபத்து குறித்து மோகன்ராஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story