லாட்டரி விற்ற 3 பேர் கைது
நீலகிரி மாவட்டத்தில் லாட்டரி விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நீலகிரி
ஊட்டி
ஊட்டி சாமுண்டி சந்திப்பு பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக மத்திய போலீசாருக்கு புகார் வந்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த ஷரப் அலி என்பதும், லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
இதேபோன்று கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த ரோஸ் காட்டேஜ் பகுதியை பிரகாஷ் என்பவரையும், அய்யங்கொல்லியில் லாட்டரி சீட்டு விற்ற கோழிசால் பகுதியை சேர்ந்த திலீப் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story