அரசு பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கிய 3 பேர் கைது
விக்கிரவாண்டி அருகே அரசு பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கிய 3 பேர் கைது
விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி அருகே வாக்கூரை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன்(வயது 60), அரசு பஸ் டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு அரசு பஸ்சை, திருக்கனூரில் இருந்து பனையபுரம் நோக்கி ஓட்டிச்சென்றார். மதுரப்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது அதே திசையில் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த எம்.குச்சிப்பாளையத்தை சேர்ந்த ரகுபதி(31), ராஜேஷ்(34), விக்கிரவாண்டி ஒத்தவாடை தெருவை சேர்ந்த கார்த்திகேயன்(30) ஆகியோர், அந்த அரசு பஸ்சை வழிமறித்து ஏன் எங்களுக்கு வழிவிடாமல் வந்தாய் எனக்கேட்டு ஜெயச்சந்திரனை திட்டி தாக்கினர். இதை தடுக்க முயன்ற பஸ் கண்டக்டரான வெட்டுக்காட்டை சேர்ந்த பழனி(57), பஸ் பயணியான பனையபுரம் அங்கம்மாள்(50) ஆகியோரையும் அவர்கள் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து ஜெயச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் ரகுபதி, ராஜேஷ், கார்த்திகேயன் ஆகியோர் மீது விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.