ஓட்டல் ஊழியரை தாக்கிய சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது
ஓட்டல் ஊழியரை தாக்கிய சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை
கீரனூர் அருகே திருப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 35). இவர் திருச்சி புறவழிச்சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு ஓட்டலுக்கு 3 பேர் உணவு சாப்பிட வந்தனர். அப்போது, சரவணன் உணவு முடிந்து விட்டதாக கூறினார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இதைதொடர்ந்து வேலை முடிந்து வீட்டிற்கு சென்ற சரவணனை வழிமறித்து 3 பேரும், தாக்கியதில் அவர் காயமடைந்தார். இதுகுறித்து சரவணன் கீரனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஒடுக்கூரை சேர்ந்த வீரமணி (19) மற்றும் மதுரையை சேர்ந்த 17 வயதுடைய 2 சிறுவர்கள் உள்பட 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story