கோவிலுக்கு சென்றவரின் வீட்டில் 3 பவுன் நகை திருட்டு
ஆழ்வார்குறிச்சி அருகே கோவிலுக்கு சென்றவரின் வீட்டில் 3 பவுன் நகையை திருடி சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தென்காசி
கடையம்:
ஆழ்வார்குறிச்சி அருகே வாகைகுளம் ராமர் காலனியை சேர்ந்தவர் மாதவன். இவருடைய மனைவி மாலா (வயது 35). இவரது சகோதரி பரமகல்யாணி, ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள அழகப்பபுரத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அழகப்பபுரத்தில் நடந்த கோவில் கொடை விழாவை பார்ப்பதற்காக மாலா தனது சகோதரி வீட்டுக்கு சென்றிருந்தார். கடந்த 3-ந்தேதி அவர்கள் பாட்டு கச்சேரியை பார்ப்பதற்காக குடும்பத்துடன் சென்றனர். பின்னர் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்தபோது, வீட்டில் இருந்த மாலாவின் 3 பவுன் தங்கச்சங்கிலி திருட்டு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மாலா கொடுத்த புகாரின் பேரில், ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்மநபரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story