வாடகை பாக்கி செலுத்தாத 3 கடைகளுக்கு 'சீல்'


வாடகை பாக்கி செலுத்தாத 3 கடைகளுக்கு சீல்
x

திருவண்ணாமலை ஜோதி பூ மார்க்கெட்டில் வாடகை பாக்கி செலுத்தாத 3 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை தேரடி வீதியில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஜோதி பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட பூக்கடைகள் உள்ளன.

இதில் திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் விளைவிக்கப்படும் பூக்கள் கொண்டு வரப்பட்டு மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று ஜோதி பூ மார்க்கெட்டிற்கு வந்த நகராட்சி ஊழியர்கள் வாடகை பாக்கியை முறையாக செலுத்தாத 3 கடைகளுக்கு சீல் வைத்தனர்.

இதனையறிந்த கடை வியாபாரிகள் ஒன்று திரண்டு நகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பூ மார்க்கெட்டில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

2 மணி நேரத்திற்கு பிறகு பூ வியாபாரிகள் தங்கள் கடைகளில் உள்ள வாடகை பாக்கிகளை தவணை முறையில் செலுத்துவதாகவும், அதற்கு தங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என தெரிவித்ததன் அடிப்படையில் சீல் வைக்கப்பட்ட கடைகளில் இருந்து சீல் அகற்றப்பட்டது.


Related Tags :
Next Story