மாணவர்கள் மோதல் சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது


மாணவர்கள் மோதல் சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது
x

இன்ஸ்டாகிராம் பதிவு காரணமாக மாணவர்கள் மோதல் சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது

திருப்பூர்

நல்லூர்

காங்கயத்தில் செயல்பட்டுவரும் தனியார் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இடையே இன்ஸ்டாகிராம் பதிவு காரணமாக கடந்த 1-ந்தேதி விஜயாபுரம் பகுதியில் சீனியர் மாணவர்களான கார்த்திக் (வயது21), லட்சுமணன் (21), பிரபாகரன் (20) மற்றும் சூர்யா (21) ஆகிய மாணவர்களை அதே தனியார் கல்லூரியில் பயின்று வரும் ஜூனியர் மாணவர்களான கிஷோர் (21), பூபதி ராஜா (19), ஸ்ரீ கவுதம் (20), ஈஸ்வரன் (22) மற்றும் கிஷோர் தொடர்புடைய வெளி நண்பர்களும் தாக்கினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதில் காயம் அடைந்த சீனியர் மாணவர்கள் 3 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.இச்சம்பவம் குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏற்கனவே கிஷோரை கைது செய்த நிலையில் மேலும் பூபதி ராஜா, ஸ்ரீகவுதம், ஈஸ்வரன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story