கூடுதல் விலைக்கு மது விற்ற 3 டாஸ்மாக் கடைகளுக்கு அபராதம்


கூடுதல் விலைக்கு மது விற்ற 3 டாஸ்மாக் கடைகளுக்கு அபராதம்
x

கூடுதல் விலைக்கு மது விற்ற 3 டாஸ்மாக் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

சேலம்

ஓமலூர் அருகே காமலாபுரம் பகுதியில் உள்ள சில டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக டாஸ்மாக் அதிகாரிகளுக்கு புகார் சென்றது. அதன்பேரில் டாஸ்மாக் மேலாளர் குப்புசாமி தலைமையில் அதிகாரிகள் புகார் வந்த கடைகளுக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது 3 கடைகளில் மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த 3 கடைகளுக்கும் தலா ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து டாஸ்மாக் மேலாளர் குப்புசாமி உத்தரவிட்டார்.


Next Story