விவசாயியை தாக்கி கொலை மிரட்டல்; 3 வாலிபர்கள் கைது


விவசாயியை தாக்கி கொலை மிரட்டல்; 3 வாலிபர்கள் கைது
x

விவசாயியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

பரமத்திவேலூர்

விவசாயி

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள கொண்டம்பட்டி, கணக்கன்காடு பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி (வயது 60) விவசாயி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலகவுண்டம்பட்டிக்கு தனது மொபட்டில் சென்று கொண்டு இருந்தார். நாய்கடிபுதூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது மதுபோதையில் இருந்த 3 வாலிபர்கள் அவரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் 23-ந் தேதி நல்லதம்பி வேலகவுண்டம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சென்று தனது மொபட்டை நிறுத்தினார். அப்போது அங்கிருந்த அந்த 3 வாலிபர்களும் அவரை பார்த்து அன்றைக்கு நீ தான் எங்களிடம் தகராறு செய்தாய் என கூறினார். பின்னர் தரக்குறைவாக பேசி நல்லதம்பியை தாக்கி கொலைமிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

3 பேர் கைது

இதுகுறித்து நல்லதம்பி வேலகவுண்டம்பட்டி போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நல்ல தம்பியை தாக்கிய நாமக்கல் தாலுகா, கோதூர், அண்ணா நகரை சேர்ந்த துரைசாமி மகன் விக்னேஷ் (24), பரமத்தி அருகே உள்ள செருக்கலைபுதுப்பாளையத்தைச் சேர்ந்த முத்து என்பவர் மகன் மணிகண்டன் (23), அதே பகுதியைச் சேர்ந்த பூமிநாதன் மகன் பிரபாகரன் (22) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து நாமக்கல் கிளைச்சிறையில் அடைத்தனர்.


Next Story