ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 3½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்; வாலிபர் கைது


ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 3½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்; வாலிபர் கைது
x

ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 3½ டன் ரேஷன் அசிரி பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் கைதானார்.

திருவள்ளூர்

வாகன சோதனை

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் பொருட்டு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை இயக்குநர் ஆபாஸ் குமார் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

3½ டன் ரேஷன் அரிசி

அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி வேனை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் சுமார் 50 கிலோ எதைக் கொண்ட 70 மூட்டைகளில் 3,500 கிலோ ரேஷன் அரிசியை ஆந்திர மாநிலத்திற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் அந்த மினி வேனையும், ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் கசவநல்லாத்தூர் மேட்டு தெருவை சேர்ந்த பிரகாஷ் (வயது 33) என்பவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

2 பேருக்கு வலைவீச்சு

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். போலீசார் வருவதை கண்டதும் அந்த மினி வேனில் இருந்து குதித்து தப்பி ஓடிய டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story