புதுக்கோட்டையில் 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
புதுக்கோட்டையில் 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் கோட்டைப்பட்டினம்-ஆவுடையார்கோவில் செல்லும் சாலையில் மஞ்சகுடி கிராமத்தில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். இதில் ரேஷன் அரிசி மூட்டைகள் விற்பனைக்காக கடத்தி செல்லப்படுவது தெரியவந்தது. இதில் சுமார் 3 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தன. இதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தியதாக சன்னராம் என்பவரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய பிரபுவை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story