கிராவல் மண் ஏற்றி வந்த 3 லாரி பறிமுதல்


கிராவல் மண் ஏற்றி வந்த 3 லாரி பறிமுதல்
x
தினத்தந்தி 30 July 2023 12:15 AM IST (Updated: 30 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நெகமத்தில் அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றி வந்த 3 லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக டிரைவர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோயம்புத்தூர்
நெகமம்


நெகமத்தில் அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றி வந்த 3 லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக டிரைவர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.


வாகன சோதனை


பொள்ளாச்சியை அடுத்த நெகமம் மற்றும் சுற்றவட்டார பகுதிக ளில் கல் குவாரிகள் உள்ளன. அங்கிருந்து அதிகளவில் கனிம வளங்கள் கேரளா மற்றும் பிற பகுதிகளுக்கு அனுமதியின்றி கடத்தப்படுவதாக புகார் எழுந்தது.


இதைத்தொடர்ந்து நேற்றுமுன்தினம் இரவு நெகமம் குருநல்லி பாளையம் பிரிவு அருகே நெகமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மராஜ், கப்பளாங்கரை கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) ஜெயக்குமார் மற்றும் போலீசார் ரோந்து சென்று வாகன சோதனை நடத்தினர்.


3 லாரிகள் பறிமுதல்


அப்போது கிராவல் மண் ஏற்றிக்கொண்டு தொடர்ந்து 3 லாரிகள் வந்து கொண்டு இருந்தன. அவற்றை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். இதில், லாரிகளில் அனுமதி யின்றி கிராவல் மண் ஏற்றி வந்தது தெரிய வந்தது.

உடனே அந்த 3 லாரிகளையும் பறிமுதல் செய்து நெகமம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இது குறித்து கப்பளாங்கரை கிராம நிர்வாக அலுவலர் ஜெயப்பிரகாஷ் நெமம் போலீசில் புகார் அளித்தார்.


5 பேர் கைது


அதன் பேரில் நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர்களான மூட்டாம்பாளையத்தை சேர்ந்த ரமேஷ்குமார் (வயது 36), உதவிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் (29), நல்லட்டி பாளையத்தை சேர்ந்த சாந்தகுமார் (46), கிளீனர்களான கக்கட வை சேர்ந்த சோமசுந்தரம் (39), செங்குட்டைப்பாளையத்தை சேர்ந்த தீபசிலம்பரசன் (35) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.


பின்னர் அவர்கள் 5 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.



Next Story