வாழப்பாடி அருகே அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதல் - 2 பேர் படுகாயம்


வாழப்பாடி அருகே அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதல் - 2 பேர் படுகாயம்
x

வாழப்பாடி அருகே அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.

சேலம்,

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே நேற்று இரவு பொள்ளாச்சியில் இருந்து 2000 இளநீர் ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது.

இந்த லாரி இன்று அதிகாலை 2.30 மணி அளவில் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாழப்பாடி அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த 2,000 இளநீர் காய்களும் சாலையில் சிதறியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், பெருந்துறையில் இருந்து அரியலூர் நோக்கி சென்ற சிமெண்ட் லாரி விபத்து நடந்த பகுதியில் நின்று கொண்டிருந்தபோது, பெங்களூரில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி சென்ற சொகுசுப் பேருந்து, சிமெண்ட் லாரி மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக சொகுசு பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.

மேலும், இளநீர் ஏற்றி வந்த லாரி டிரைவர் மாதவன், செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த ஏழுமலை ஆகிய இருவர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story