3 பெண்கள் சாவு
வெவ்வேறு சம்பவங்களில் 3 பெண்கள் இறந்தனர்.
வெவ்வேறு சம்பவங்களில் 3 பெண்கள் இறந்தனர்.
கீழே விழுந்தார்
சமயபுரம் அருகே உள்ள சாத்தம்பாடியைச் சேர்ந்தவர் கனகராஜ்.இவரது மனைவி இந்திராணி (வயது 40). இவருக்கும்
திருச்சி கீழகல்கண்டார் கோட்டையைச் சேர்ந்த லாரி டிரைவர் காமராஜ் (45) என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்திராணி சில நாட்களுக்கு முன் கீழே விழுந்ததால் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து கட்டுபோடுவதற்காக நேற்று முன்தினம் காமராஜ் அவரை மோட்டார் சைக்கிளில் துறையூருக்கு அழைத்து சென்றார். பின்னர் மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். மண்ணச்சநல்லூர்- திருச்சி புறவழிச்சாலையில் உளுந்தங்குடி அருகே வந்தபோது, மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த இந்திராணி நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துவிட்டு காமராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
சாவு
இந்நிலையில், மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்ட இந்திராணி அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராமன் வழக்கு பதிவு செய்து காமராஜை நேற்று கைது செய்தார்.
தற்கொலை
துறையூர் அருகே உள்ள கோலபாதையை சேர்ந்தவர் ராஜ். இவரது மகள் காவியா (19). வயிற்று வலியால் அவதி அடைந்து வந்த இவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடன் சுமை
திருச்சி ஏர்போர்ட் கலைவாணர் தெருவை சேர்ந்தவர் மணிமேகலை (40). கணவரை பிரிந்து வசித்து வந்த இவர் கடன் சுமையால் அவதி அடைந்து வந்தார். இதனால் மனம் உடைந்த அவர் கடந்த 29-ந்தேதி எலி மருந்து (விஷம்) தின்று மயங்கி கிடந்தார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலன் இன்றிஇறந்தார். இது குறித்த புகாரின் பேரில் விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.