3 வயது சிறுவன் கொலை - எதிர்வீட்டு பெண் கைது


3 வயது சிறுவன் கொலை - எதிர்வீட்டு பெண் கைது
x

3 வயது சிறுவன் சாக்குப்பைக்குள் பிணமாக இருந்துள்ளான்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே ஆத்துக்குறிச்சி என்ற கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி ரம்யா. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள். இரண்டாவது மகனுக்கு 3 வயது. இந்த நிலையில், இன்று காலை 9.30 மணியளவில் சிறுவனை அங்கன்வாடிக்கு அழைத்து செல்ல ரம்யா தேடியுள்ளார். மேலும் அங்கன்வாடி மையத்துக்கும் சென்று தேடியுள்ளார். ஆனால் அங்கேயும் சிறுவன் இல்லை. இதையடுத்து அக்கம்பக்கத்தினருடனும், உறவினர்களிடம் சிறுவனை காணாதது குறித்து கூறியுள்ளார்.

தொடர்ந்து விக்னேஷ் மற்றும் ரம்யா இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சிறுவனின் எதிர் வீட்டில் இருந்த தங்கம்மாள் என்ற பெண் போலீசை கண்டதும் பதற்றத்துடன் வெளியே ஓடினார். இதனால் சந்தேகமடைந்து போலீசார் அவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது ரத்தக்கறையுடன் ஒரு சாக்குப்பை இருந்துள்ளது.

அதனை திறந்து பார்த்தபோது சிறுவன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தது தெரியவந்தது. சிறுவன் பிணமாக மீட்கப்பட்டதை பார்த்ததும் சிறுவனின் தந்தை, தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதையடுத்து தப்பியோடிய அந்த பெண்ணை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபப்பையும், சோகத்தையும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story