3 ஆண்டுகள் சிறை


3 ஆண்டுகள் சிறை
x

முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தில் முறைகேடு செய்த டாக்டர், கண்காணிப்பாளர், இளநிலை உதவியாளர் ஆகிய 3 பேருக்கு 3 ஆண்டுகள் சிைற தண்டனை விதித்து திருவையாறு கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

தஞ்சாவூர்

முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தில் முறைகேடு செய்த டாக்டர், கண்காணிப்பாளர், இளநிலை உதவியாளர் ஆகிய 3 பேருக்கு 3 ஆண்டுகள் சிைற தண்டனை விதித்து திருவையாறு கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

முறைகேடு

தஞ்ைச மாவட்டம் திருவையாறை அடுத்த நடுக்காவேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்துவந்தவர் மணிசேகரன் (வயது61). இங்கு கண்காணிப்பாளராக பணிபுரிந்த மைதிலி (69). உதவி டாக்டராக பணிபுரிந்த மனோகரன் (63).

கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் 2011-ம் ஆண்டு நவம்பர் மாதங்களில் இவர்கள் 3 பேரும் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்கவேண்டிய உதவித்தொகையை வழங்காமல் ரூ.12 லட்சத்து 9 ஆயிரம் முறைகேடு செய்தது தெரியவந்தது.

கைது

இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவில் கடந்த 2018-ம் ஆண்டு அங்கு பணிபுரிந்த டாக்டர் கார்த்திகேயன் புகார் செய்தார். அதன்பேரில் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மணிசேகரன், மைதிலி, மனோகரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதுதொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதா 2020-ம் ஆண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.

3 ஆண்டுகள் சிறை

இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ், சப்-இன்ஸ்பெக்டர் தவபுதல்வன் மற்றும் போலீசார் திருவையாறு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த திருவையாறு குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஹரிராம், முறைகேட்டில் ஈடுபட்ட இளநிலை உதவியாளர் மணிசேகரனுக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும், மைதிலி, மனோகரன் ஆகிய இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


Next Story