வீடு புகுந்து நகை திருடியவருக்கு 3 ஆண்டு சிறை


வீடு புகுந்து நகை திருடியவருக்கு 3 ஆண்டு சிறை
x

புதுச்சத்திரம், மோகனூர், எருமப்பட்டி போன்ற பகுதிகளில் வீடு புகுந்து திருடியவருக்கு சேந்தமங்கலம் கோர்ட்டில் நேற்று 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.

நாமக்கல்

சேந்தமங்கலம்

வீடுகளில் திருட்டு

தேனி மாவட்டம் காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் தங்கமுத்து (வயது 54). இவர் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தனது கைவரிசையை காட்டி வீடுகளில் புகுந்து திருடியதால் ஏராளமான வழக்குகள் உள்ளன. அதேபோல நாமக்கல் மாவட்டத்தில் உள்ள புதுச்சத்திரம், மோகனூர், எருமப்பட்டி போன்ற பகுதிகளில் கடந்த 2016-ம் ஆண்டு பல வீடுகளில் புகுந்து திருடியுள்ளார்.

இந்த நிலையில் நாமக்கல் அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டியில் வசித்து வந்த ராஜேஷ் கண்ணா என்பவரது வீட்டில் புகுந்து 2 பவுன் செயின், ஒரு பவுன் தோடு ஆகியவற்றை கடந்த 2016-ம் ஆண்டு திருடிச் சென்றுள்ளார்.

3 ஆண்டுகள் சிறை

இதை அறிந்த எருமப்பட்டி போலீசார் தங்கமுத்துவை கைது செய்து சேந்தமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர் மீது வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கின் விசாரணை முடிவடைந்ததை அடுத்து நேற்று குற்றவியல் நீதிபதி ஹரிஹரன் தீர்ப்பு கூறினார். அதில் குற்றவாளி தங்கமுத்துவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 2 ஆயிரம் அபராதம் விதித்தார்.

1 More update

Next Story