தகராறில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது
மேலப்பாளையத்தில் தகராறில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி
நெல்லை அருகே மேலப்பாளையம் கொட்டிகுளம் பஜார் பகுதியில் நேற்று முன்தினம் பொதுமக்கள் பலர் பொருட்கள் வாங்கிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த 3 வாலிபர்கள் திடீரென ஒருவரை வருவர் தாக்கி கொண்டனராம்.
இதுகுறித்து மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். விசாரணையில், அவர்கள் மேலப்பாளையம் கொட்டிகுளத்தை சேர்ந்த இசக்கிபாண்டி (வயது 29), குறுக்குத்துறையை சேர்ந்த பூமாலை (30), நயினார்செல்வராஜ் (27) ஆகியோர் என்பதும், அவர்கள் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பொதுவெளியில் தகராறில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story