கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது
செய்யாறில் கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை
செய்யாறு
செய்யாறு டவுன் திருவத்திபுரம் ஆற்றங்கரை பாலத்தின் அருகே செய்யாறு போலீஸ் சப்-இன்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசாரை கண்டவுடன் அங்கிருந்து 3 பேர் தப்பி ஓடினர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர்கள் காமராஜ் நகர் பகுதி சேர்ந்த அபினேஷ் (வயது 22) மற்றும் 19 வயதுள்ள 2 வாலிபர்கள் என்பது தெரிய வந்தது.
மேலும் அவர்களிடம் இருந்து சுமார் 5 கிராம் எடையுள்ள 10 கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story