1¼ கிலோ கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது


1¼ கிலோ கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது
x

1¼ கிலோ கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

ஆலங்குடி மதுவிலக்கு போலீசார் ஆவணம் கைகாட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு கஞ்சா விற்று கொண்டிருந்த அறந்தாங்கி களப்பக்காடு பாரதி நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சேவுகப்பெருமாள் (வயது 30), சிலோன் காலனியை சேர்ந்த செல்வராஜ் மகன் சஞ்சய் (20), பட்டுக்கோட்டை நரிக்குறவர் காலனி பாரதி நகரை சேர்ந்த சந்திரன் மகன் முருகன் (35) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்து 1 கிலோ 275 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஆலங்குடி மதுவிலக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி வழக்குப்பதிவு செய்து, 3 பேரையும் ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.


Related Tags :
Next Story