அரிசி ஆலை ஊழியரிடம் செல்போன் பறித்த 3 வாலிபர்கள் கைது


அரிசி ஆலை ஊழியரிடம் செல்போன் பறித்த 3 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 8 Aug 2023 12:15 AM IST (Updated: 8 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் அருகே தனியார் அரிசி ஆலை ஊழியரிடம் செல்போன் பறித்த 3 வாலிபர்களை போலீசார் கைதுசெய்தனர்

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்

அரிசி ஆலை ஊழியர்

சின்னசேலத்தை அடுத்த தென்பொன்பரப்பி பழைய காலனியை சேர்ந்தவர் பெரியசாமி மகன் சேரன்(வயது 26). இவர் சின்னசேலத்தில் உள்ள தனியார் அரிசி ஆலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று மாலை சேரன் அம்மையகரத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் சமத்துவபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

ரெயில்வே சுரங்கப்பாதையில் வந்ததும் செல்போன் அலாரம் ஒலித்ததால் சேரன் ஓரமாக நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் திடீரென சேரனின் கையில் இருந்த செல்போனை பறித்துவிட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போனை பறித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.

3 வாலிபர்கள் கைது

இந்த நிலையில் அம்மையகரம் ரெயில்வே கேட் அருகே போலீசார் வாகன சோதனை நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை நிறுத்தி விசாரித்தபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் மூங்கில்பாடி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சின்னதுரை மகன் விக்ரம்(19), அதே பகுதியை சேர்ந்த சேகர் மகன் கார்த்திக்(19), கொளஞ்சி மகன் கோபிநாத் (22) என்பதும், சேரனிடம் செல்போனை பறித்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் திருடப்பட்ட செல்போனையும் பறிமுதல் செய்தனர்.


Next Story