தகராறில் 3 வாலிபர்கள் கைது

தகராறில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
தேவகோட்டை
தேவகோட்டை அருகே சித்தானூர் சாலையில் கடந்த 7-ந்தேதி அழகாபுரி தெற்கு தெருவை சேர்ந்த செந்தில்குமார் மற்றும் அவருடன் 16 வயதுடைய பள்ளி மாணவன் இருவரும் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது நிலை தடுமாறி மின்கம்பத்தில் மோதினர். இதில் இருவரும் பலத்த காயங்களுடன் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றனர். பின்னர் மதுரை தனியார் மருத்துவமனையில் செந்தில்குமார் சிகிச்சை பலனின்றி 13-ந் தேதி உயிரிழந்தார். அன்று மாலை 5 மணி அளவில் மயானத்திற்கு கொண்டு சென்றனர். அந்த இறுதி ஊர்வலத்தில் ஒத்தக்கடை பகுதி சாலைகளில் பொது மக்களுக்கு இடையூறு மற்றும் அச்சுறுத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இவர்களது தாக்குதல் ஒரு வாலிபர் காயம் அடைந்தார். அவரது புகாரின் பேரில் நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சரவணன் புகாரின் பேரில் கட்ட முருகப்பன் சபரி ராஜா (வயது 21) நல்லாங்குடியைச் சேர்ந்த செல்வராஜ் (40) டைமன் சிட்டி பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் (31) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.