வீட்டில் பதுக்கி வைத்திருந்த 30 கிலோ குட்கா பறிமுதல்


வீட்டில் பதுக்கி வைத்திருந்த 30 கிலோ குட்கா பறிமுதல்
x

குன்னம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 30 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்வதாக பல்வேறு புகார் வந்தது. ேமலும் பெரியம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த ரகுராமன் (வயது 32) என்பவர் கடைகளுக்கு குட்காவை வினியோகம் செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் குன்னம் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சீவ் குமார், பெரியம்மாபாளையம் கிராம நிர்வாக அலுவலர் உடையான் ஆகியோர் ரகுராமன் வீட்டிற்கு சென்றனர். அப்போது அவருடைய வீடு பூட்டி இருந்தது. இதையடுத்து, போலீசார் அந்த வீட்டை திறந்து பார்த்தபோது 30 கிலோ எடையுள்ள பல்வேறு வகையான குட்கா பொருட்கள் அங்கு பதுக்கி வைத்திருந்தது இருந்தது. இதையடுத்து அதனை போலீசார் பறிமுதல் செய்து குன்னம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ரகுராமனை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story