மதுவிற்ற 8 பெண்கள் உள்பட 30 பேர் கைது
மதுவிற்ற 8 பெண்கள் உள்பட 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் சாராயம் மற்றும் கள்ள சந்தையில் மதுவிற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவிட்டார். அதன்பேரில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், சட்டம்-ஒழுங்கு போலீசார் நேற்று முன்தினம் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர சோதனை, ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வீடு மற்றும் பெட்டிக்கடையின் அருகே பதுக்கி வைத்து மது விற்றது தொடர்பாக 30 வழக்குகள் பதிந்து 8 பெண்கள் உள்பட 30 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 179 குவாட்டர் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story