30 ஆயிரத்து 277 மாணவ-மாணவிகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்


30 ஆயிரத்து 277 மாணவ-மாணவிகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்
x

30 ஆயிரத்து 277 மாணவ-மாணவிகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் 30 ஆயிரத்து 277 மாணவ-மாணவிகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதினர். 836 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. நேற்று முதல் நாள் தமிழ்பாடத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு வருகிற 20-ந்தேதி வரை நடைபெறுகிறது. தஞ்சை மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வினை 409 பள்ளிகளை சேர்ந்த 31 ஆயிரத்து 113 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்தனர்.

இவர்கள் 136 மையங்களில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் மாணவர்கள் 15 ஆயிரத்து 700 பேரும், மாணவிகள் 15 ஆயிரத்து 413 பேரும் அடங்குவர். இந்த பணியில் 136 தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள், 136 துறை அலுவலர்கள், 8 வினாத்தாள் கட்டுகாப்பாளர்கள், 28 வழித்தட அலுவலர்கள், 195 நிலையான பறக்கும் படை உறுப்பினர்கள், 1,872 அறைக்கண்காணிப்பாளர்கள், 399 சொல்வதை எழுதுபவர்கள் மற்றும் 272 அலுவலகப் பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

452 மாற்றுத்திறனாளி மாணவர்கள்

தஞ்சை மாவட்டத்தில் 452 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதினர். இம்மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக தரைதளத்தில் தேர்வு அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. உடல் ஊனமுற்றோர், கண் பார்வையற்றோர், காது கேளாத வாய் பேச இயலாதோர், மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு கூடுதலாக 1 மணி நேரம் ஒதுக்கியும், சொல்வதை எழுதுவதற்கு ஆசிரியர்கள் நியமனம் செய்தும் ஆணை வழங்கப்பட்டுள்ளது.தஞ்சை மாவட்டத்தில் தேர்வு பணிகள் சிறப்பான முறையில் நடைபெறுவதை கண்காணிக்க தமிழக அரசால் தனியார் பள்ளிகள் இயக்கக துணை இயக்குனர் சம்பத் கண்காணிப்பு அலுவலராக நியமனம் செய்து தேர்வு பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பஸ் வசதி

மேலும் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் கல்வித்துறை அலுவலர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட வருவாய் அலுவலர், சப்-கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆய்வு அலுவலர்கள், ஊர்க்காவல் படைத்தலைவர் மற்றும் பிற துறை அலுவலர்களை கொண்டு மாவட்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டு தேர்வு மையங்களை திடீர் ஆய்வு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம், மற்றும் கழிப்பிட வசதிகளை சிறப்பான முறையில் அமைத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்கள் அமைந்துள்ள பகுதியில் தடையில்லா மின்சார வசதி ஏற்படுத்தியும், தேர்வு மைய வழித்தடங்களில் மாணவர்கள் சிரமமின்றி செல்வதற்கு வசதியாக பஸ்கள் இயக்கப்பட்டன.

836 பேர் தேர்வு எழுத வரவில்லை

Only 30 thousand 277 candidates appeared for the exam. This includes 15 thousand 124 males and 15 thousand 153 females. 836 people did not come to write the exam. This includes 576 male students and 260 female students.


Related Tags :
Next Story