திருச்சியில் 30 வருடமாக செயல்பட்டு வந்த ஐஸ்கிரீம் கடைக்கு சீல் - சோதனையில் தரமில்லாத ஐஸ்கிரீம்கள் இருந்ததால் நடவடிக்கை


திருச்சியில் 30 வருடமாக செயல்பட்டு வந்த ஐஸ்கிரீம் கடைக்கு சீல் - சோதனையில் தரமில்லாத ஐஸ்கிரீம்கள் இருந்ததால் நடவடிக்கை
x

திருச்சியில் பிரபல ஐஸ்கிரீம் கடை சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வந்ததாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

திருச்சி,

திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் பிரபலமான ஐஸ்கிரீம் கடை ஒன்றில் தரமற்ற முறையில் ஐஸ்கிரீம்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் ஐஸ்கிரீம்கள் தயாரிக்கும் இடம் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ரமேஷ்பாபு தலைமையில் அதிகாரிகள் இந்த ஐஸ்கிரீம் கடையில் சோதனை நடத்தினர். சோதனையில் அங்கு தரமற்ற முறையில் ஐஸ்கிரீம்கள் தயாரிக்கப்பட்டதும் ஐஸ்கிரீம்கள் தயார் செய்யப்படும் இடங்கள் அனைத்தும் சுகாதாரமற்ற முறையில் இருப்பதும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து அந்த கடைக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். திருச்சியில் பிரபல ஐஸ்கிரீம் கடைக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story