300 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்


300 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 16 Nov 2022 6:45 PM GMT (Updated: 16 Nov 2022 6:45 PM GMT)

கம்பத்தில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 300 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் குடோன் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

தேனி

கம்பம் புதுபஸ்நிலையம் பகுதியில் உள்ள குடோன் ஒன்றில், புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பதாக கம்பம் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய்ஆனந்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று காலை அந்த குடோனில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது 14 மூட்டைகளில் சுமார் 300 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கம்பம் குட்டியா பிள்ளைத்தெருவை சேர்ந்த பாசித்ராஜா (வயது 37) என்பவருக்கு சொந்தமான குடோன் என்றும், மாரியம்மன் கோவில் அருகே மளிகை கடை நடத்தி வரும் மாரிச்சாமி (30) என்பவருடன் சேர்ந்து புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பாசித்ராஜாவை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மாரிச்சாமியை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story