300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x

300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கன்னியாகுமரி

நாகா்கோவில்:

குமரி மாவட்ட உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி தலைமையில் போலீசார் மேலமணக்குடி பஸ் நிறுத்தம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு பாழடைந்த வீட்டில் சோதனை செய்த போது சிறு, சிறு மூடைகளில் 300 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் இந்த அரிசி கேரளாவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து ரேஷன் அரிசி மூடைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கடத்தலில் தொடர்புடைய நபர்களை தேடி வருகிறார்கள்.


Next Story