பள்ளி, கல்லூரிகளுக்கு 30-ந் தேதி விடுமுறை


பள்ளி, கல்லூரிகளுக்கு 30-ந் தேதி விடுமுறை
x
தினத்தந்தி 25 Oct 2023 6:45 PM GMT (Updated: 25 Oct 2023 6:45 PM GMT)

பள்ளி, கல்லூரிகளுக்கு 30-ந் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது.

சிவகங்கை

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் வருகிற 30-ந் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116-வது பிறந்த நாள் மற்றும் 61-வது குருபூஜை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், இளையான்குடி ஆகிய ஒன்றியங்களில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வருகின்ற 30-ந் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த தகவலை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.


Next Story