31,475 பயணிகளிடம் ரூ.3¼ கோடி அபராதம் வசூல்


31,475 பயணிகளிடம் ரூ.3¼ கோடி அபராதம் வசூல்
x
தினத்தந்தி 8 July 2023 1:45 AM IST (Updated: 8 July 2023 1:45 AM IST)
t-max-icont-min-icon

நடப்பு நிதியாண்டில் ரெயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த 31 ஆயிரத்து 475 பயணிகளிடம் இருந்து ரூ.3¼ கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது.

கோயம்புத்தூர்

நடப்பு நிதியாண்டில் ரெயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த 31 ஆயிரத்து 475 பயணிகளிடம் இருந்து ரூ.3¼ கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது.


அதிகாரிகள் சோதனை


சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-


சேலம் ரெயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட சேலம், கோவை, ஈரோடு உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் டிக்கெட் எடுக்காமல் ரெயிலில் பயணம் செய்தவர்கள், முறையற்ற வகையில் பயணிப்ப வர்கள், பதிவு செய்யாமல் சரக்குகளை கொண்டு செல்பவர்களை கண்டறிய ரெயில்வே அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்கள் உள்ளிட்டவர்களை அதிகாரிகள் கண்டறிந்து அபராதம் விதித்தனர்.


ரூ.3¼ கோடி அபராதம்


அதன்படி 2023- ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜூன் வரை சேலம் ரெயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட ரெயில் நிலையங்களில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த 31 ஆயிரத்து 475 பேரிடம் இருந்து ரூ.2 கோடியே 43 லட்சத்து 9 ஆயிரத்து 875 அபராதம் வசூலிக்கப்பட்டது.

இது போல் முறையற்ற பயணம் மேற்கொண்டதாக 16 ஆயிரத்து 515 பேரிடம் இருந்து ரூ.83 லட்சத்து 59 ஆயிரத்து 362 அபராதம் வசூலிக்கப்பட்டது.

பதிவு செய்யாமல் சரக்குகளை ரெயிலில் கொண்டு சென்ற 105 பேரிடம் இருந்து ரூ.55 ஆயிரத்து 283 அபராதம் வசூலிக்கப்பட்டது.

மொத்தமாக இந்தாண்டின் முதல் காலாண்டில் ரூ.3 கோடியே 27 லட்சத்து 24 ஆயிரத்து 520 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.



Next Story