மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 315 மனுக்கள் பெறப்பட்டன


மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 315 மனுக்கள் பெறப்பட்டன
x

புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 315 மனுக்கள் பெறப்பட்டன.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோாிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 315 மனுக்கள் பெறப்பட்டன. மனுவை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில், பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் குறைபாடுடைய 5 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.14 ஆயிரம் வீதம் ரூ.70 ஆயிரம் மதிப்புடைய தக்க செயலியுடன் கூடிய திறன்பேசிகளையும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில், குளத்தூர் வட்டம், உலகத்தான்பட்டி, கிள்ளுக்கோட்டையை சேர்ந்த தனபால் என்ற கட்டுமான தொழிலாளி விபத்தில் இறந்ததையொட்டி, அவரது வாரிசுதாரர்கள் 5 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.5 லட்சத்திற்கான நிதியுதவிக்கான ஆணைகளை கலெக்டர் மெர்சி ரம்யா வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதப்பிரியா உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story