பண்டிகை காலத்தை முன்னிட்டு கூடுதலாக 32 சிறப்பு ரெயில் சேவைகள் - இந்திய ரெயில்வே அறிவிப்பு


பண்டிகை காலத்தை முன்னிட்டு கூடுதலாக 32 சிறப்பு ரெயில் சேவைகள் - இந்திய ரெயில்வே அறிவிப்பு
x

பண்டிகை காலத்தில் பொதுமக்களுக்கு எளிதான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்வதற்காக கூடுதலாக 32 சிறப்பு சேவைகளை இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது.


தற்போது பண்டிகை காலம் என்பதால், பொதுமக்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை குறைக்கவும் கூடுதலாக இந்த ஆண்டு சத் பூஜை வரை, 211 சிறப்பு ரெயில்களை (சென்று,வர) 2561 டிரிப்புகளை இயக்குகிறது.

தர்பங்கா, அசம்கர், சகர்சா, பகல்பூர், முசாபர்பூர், பிரோஸ்பூர், பாட்னா, கதிஹார் மற்றும் அமிர்தசரஸ் உள்ளிட்ட வழித்தடங்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த பண்டிகை காலத்தில் பொதுமக்களுக்கு எளிதான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்வதற்காக கூடுதலாக 32 சிறப்பு சேவைகளை இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது.

இதில் தெற்கு ரயில்வே 11 வழித்தடங்களில் 56 சிறப்பு ரெயில் சேவைகளை இயக்க உள்ளது. ஏற்கனவே மொத்தம் 179 சிறப்பு ரெயில் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இருக்கைகளுக்காக முறைகேடுகளில் ஈடுபடுதல், அதிக கட்டணம் வசூலித்தல் போன்ற செயல்கள் கடுமையாக கண்காணிக்கப்படுகின்றன.

முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிகளை ஒழுங்குப்படுத்த ரெயில்வே பாதுகாப்புப் படை ஊழியர்களின் மேற்பார்வையில் ரெயில் நிலையங்களில் கூட்டத்தை சரிசெய்யும் நடவடிக்கைகள் உறுதி செய்யப்படுகின்றன.


Next Story