திருச்செங்கோட்டில் 32 நீர்நிலை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை


திருச்செங்கோட்டில்  32 நீர்நிலை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்  நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
x

திருச்செங்கோட்டில் 32 நீர்நிலை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

நாமக்கல்

எலச்சிபாளையம்‌:

திருச்செங்கோடு அம்மன் குளக்கரைகளை மேம்படுத்தி நடைமேடை அமைக்க ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தொடங்கிய நிலையில் குளத்தின் மேற்கு புற கரையில் 32 கடைகள் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஆனால் யாரும் கடைகளை அகற்றாததால் நகராட்சி ஆணையாளர் கணேசன், பொறியாளர் சண்முகம் ஆகியோர் நகராட்சி பணியாளர்களுடன் நேற்று அங்கு சென்றனர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கடைகளை இடிக்கும் பணியை தொடங்கினர்.

அப்போது கடை உரிமையாளர்கள் தாங்களாகவே கடைகளை அகற்றி கொள்வதாகவும், இடிக்க வேண்டாம் என கூறினர். இதையடுத்து கடைகளை அவர்களாகவே அகற்றி கொள்ள அனுமதிக்கப்பட்டது. பின்னர் கடைகள் அகற்றும் பணி நடந்தது.

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் கணேசன் கூறுகையில், தமிழக அரசு திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் உள்ள 5 நீர்நிலைகளை மேம்படுத்த நிதி ஒதுக்கி உள்ளது. அதன்படி சூரியம்பாளையம், ராஜா கவுண்டம்பாளையம் ஏரிகள் அம்மன்குளம், பெரிய தெப்பக்குளம், மலையடி குட்டை ஆகியவற்றின் கரைகள் மேம்படுத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது. நீர்நிலைகள் தூர்வாரி மேம்படுத்தி பராமரிக்கப்பட இருப்பதால் அம்மன்குளம் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேல் ஆக்கிரமிப்பில் இருந்த 32 கடைகளை அகற்றி உள்ளோம். மேலும் இதுபோல் நகராட்சி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ள இடங்கள் தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யப்படும் என்றார்.


Next Story