பிரமாண பத்திர உறுதிமொழியை மீறிய வாலிபருக்கு 338 நாட்கள் சிறை; பரங்கிமலை துணை கமிஷனர் உத்தரவு


பிரமாண பத்திர உறுதிமொழியை மீறிய வாலிபருக்கு 338 நாட்கள் சிறை; பரங்கிமலை துணை கமிஷனர் உத்தரவு
x

பிரமாண பத்திர உறுதிமொழியை மீறிய வாலிபருக்கு ஜாமீனில் வெளி வரமுடியாதபடி சிறையில் அடைக்க பரங்கிமலை துணை கமிஷனர் உத்தரவிட்டார்.

சென்னை

சென்னையை அடுத்த நந்தம்பாக்கம் ஆற்காடுபேட்டை தெருவைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது 28). இவர் மீது நந்தம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி உள்பட 2 வழக்குகள் உள்ளன. இவர், கடந்த மாதம் 16-ந் தேதி பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் பிரதீப் முன் ஆஜராகி, தான் திருந்தி வாழப்போவதாக கூறி நன்னடத்தை பிரமாண பத்திரம் எழுதி கொடுத்தார்.

இந்தநிலையில் கடந்த 13-ந் தேதி நந்தம்பாக்கம் ஆற்காடு தெருவில் உள்ள ஒரு கடையில் நின்று கொண்டிருந்த பாரதிவேலு என்பவரிடம் வீண் தகராறு செய்து தாக்கியதாக நந்தம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீசை கைது செய்தனர். இதையடுத்து பிரமாண பத்திர உறுதிமொழியை மீறி மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்ட சதீசை 338 நாட்கள் ஜாமீனில் வெளி வரமுடியாதபடி சிறையில் அடைக்க பரங்கிமலை துணை கமிஷனர் உத்தரவிட்டார்.

1 More update

Next Story