தேனீக்கள் கொட்டியதில் 34 தொழிலாளர்கள் காயம்


தேனீக்கள் கொட்டியதில் 34 தொழிலாளர்கள் காயம்
x

திண்டிவனம் அருகே தேனீக்கள் கொட்டியதில் 34 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.

விழுப்புரம்

திண்டிவனம்

ஏரியை ஆழப்படுத்தும் பணி

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த காட்டுசிவிரி கிராமத்தில் ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ஏரியை ஆழப்படுத்தும் பணியில் அப்பகுதியை சேர்ந்த ஆண், பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

ஏரியில் இருந்து தோண்டி எடுத்த மண்ணை அங்குள்ள ஆலமரத்தின் அருகில் கொட்டி வைத்தனர். அப்போது அதன் அருகில் உள்ள செடியில் கூடு கட்டி இருந்த மலை தேனீக்கள் திடீரென பறந்து வந்து தொழிலாளர்களை கொட்டியது. இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் அலறியடித்துக்கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். ஆனால் தேனீக்கள் விடாமல் அவர்களை பின்னால் துரத்தி சென்று கொட்டின.

34 பேர் காயம்

இதில் தொழிலாளா்கள் ராஜகோபால்(வயது 55), சேகர்(60), நடராஜன்(60), அர்ஜுனன்(45), ஜானகி(38), அலமேலு(45), வரலட்சுமி(60), இந்திரகுமாரி(32), முத்துலட்சுமி(65), தனலட்சுமி(60), கவுரி(39), லட்சுமி(70), ஜெயா(31), பத்மாவதி(32), நதியா(30), சங்கீதா(33), நித்யாவதி(33) உள்பட 34 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் சிலர் மயங்கி விழுந்தனர்.

இதையடுத்து சக தொழிலாளர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து 4 போ் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதனால் காட்டுசிவிரி கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story