35 எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகம் அதிகரிப்பு- தெற்கு ரெயில்வே தகவல்


35 எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகம் அதிகரிப்பு- தெற்கு ரெயில்வே தகவல்
x

பயணிகளின் பாதுகாப்பான பயணம் மற்றும் விரைவு பயனத்திற்கு தெற்கு ரெயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பயணிகளின் பாதுகாப்பான பயணம் மற்றும் விரைவு பயனத்திற்கு தெற்கு ரெயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதேபோல, தண்டவாள சீரமைப்பு மற்றும் ரெயில்வே கட்டமைப்புகள் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லப்பட்டு வருகிறது. அந்த வகையில், அக்டோபர் 1-ந்தேதி முதல் (இன்று) 35 எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகத்தை அதிகரிக்கப்பட உள்ளது.

அதன்படி, கோவை - சென்டிரல் எக்ஸ்பிரஸ்(வண்டி எண்.12244), விழுப்புரம் - திருப்பதி எக்ஸ்பிரஸ்(16854), சென்டிரல்-நாகர்கோவில் (12689), தாதர்-நெல்லை எக்ஸ்பிரஸ்(11021), பாலக்காடு-திருச்செந்தூர்(16731), மதுரை-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ்(16344), கோவை-மதுரை எக்ஸ்பிரஸ் (16721), ஈரோடு-நெல்லை எக்ஸ்பிரஸ்(16845), குருவாயூர்-திருவனந்தபுரம்(16341) எக்ஸ்பிரஸ், கொல்லம்-சென்னை எழும்பூர்(16824) எக்ஸ்பிரஸ், சென்னை சென்டிரல்-திருப்பதி(16053) எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 35 ரெயில்களின் வேகம் 5 நிமிடம் முதல் 40 நிமிடம் வரை அதிகரிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story