திருச்சி மாவட்டத்தில் 3,500 வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு


திருச்சி மாவட்டத்தில் 3,500 வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
x
தினத்தந்தி 2 July 2023 12:25 AM IST (Updated: 2 July 2023 5:17 PM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்தில் 3,500 வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

திருச்சி

தென்காசி,

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூரில் வக்கீல் அசோக்குமார் மற்றும் அவரது பெரியப்பா துரைராஜ் ஆகியோர் இருநாட்களுக்கு முன்பு ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். தென்காசி வழக்கறிஞர் சங்க உறுப்பினராக இருந்து வந்த வக்கீல் அசோக்குமார் கொலை செய்யப்பட்ட சம்பவம் வக்கீல்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில், தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெறும் இதுபோன்ற வக்கீல்கள் படுகொலைகளை கண்டித்தும், உடனடியாக ராஜஸ்தான் மாநிலத்தில் இயற்றப்பட்ட வக்கீல்கள் பாதுகாப்புச்சட்டம் போன்று தமிழகத்திலும் சட்டம் இயற்ற வலியுறுத்தியும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழுவின் சார்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் நேற்று கோர்ட்டு பணிகளில் இருந்து விலகி இருக்கப்போவதாக அறிவித்தனர்.

அதன்படி, திருச்சி மாவட்டத்தில் திருச்சி மாவட்ட கோர்ட்டு, துறையூர், மணப்பாறை, முசிறி, லால்குடியில் உள்ள கோர்ட்டுகளில் சுமார் 3,500 வக்கீல்கள் கோர்ட்டு பணிகளை நேற்று புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோர்ட்டு பணிகள் பாதிக்கப்பட்டன.

இதனால் பெரும்பாலான வழக்குகள் வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.


Next Story