மது விற்பனை தொடர்பாக 37 வழக்குகள் பதிவு; 7 பேர் கைது


மது விற்பனை தொடர்பாக 37 வழக்குகள் பதிவு; 7 பேர் கைது
x

மது விற்பனை தொடர்பாக 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர்

38 பேர் மீது வழக்கு

தமிழக போலீஸ் டி.ஜி.பி. உத்தரவின்பேரில் தமிழ்நாடு முழுவதும் மது வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி அறிவுரையின்பேரில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் மேற்பார்வையில், பெரம்பலூர் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பழனிச்சாமி (பெரம்பலூர்), சீராளன் (மங்களமேடு), போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்களை கொண்டு போலீஸ் குழுவினர் மாவட்டம் முழுவதும் மதுவேட்டை நடத்தினர்.

இதில் சட்டவிரோதமாக மது விற்ற 38 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து சுமார் 1,634 லிட்டர் மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சாராயம் விற்றதாக ஒருவர் மற்றும் மது விற்றதாக 6 பேரை போலீசார் கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மதுபானம் பறிமுதல்

மாவட்டத்தில் மொத்தம் 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சுமார் ரூ.58 ஆயிரம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட சாராயம் தயாரித்தால் அல்லது விற்பனை செய்தால் மாவட்ட போலீஸ் அலுவலக செல்போன் எண் 94981 00690-ஐ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story